றிஸானா நபீக் தேசத்தின் புதல்வி எனும் தலைப்பிலான நூல் மற்றும் இறுவெட்டு வெளியீடு

https://www.facebook.com/allahoruvann

றிஸானா நபீக் தேசத்தின் புதல்வி எனும் தலைப்பிலான நூல் மற்றும் இறுவெட்டு என்பன நாளை (01.03.2013) காத்தான்குடியில் வெளியிடப்படவுள்ளன.காத்தான்குடி மீடியா போரத்தினால் வெளிடப்படும் இந்த நூல் மற்றும் இறுவெட்டு வெளியீட்டு வைபவம் நாளை காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

நாளை மாலை 4மணிக்கு பெண்களுக்கும் இரவு 8மணிக்கு ஆண்களுக்குமாக இந்த வெளியீட்டு வைபவம் நடைபெறவுள்ளதாக காத்தான்குடி மீடியா போரத்தின் செயலாளர் மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா தெரிவித்தார்.

இந்த வைபவத்தில் அரசியல் பிரமுகர்கள், உலமாக்கள், முக்கியஸ்தர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் றிஸானா நபீக்கின் குடும்பத்தினரும் கலந்து கொள்ளவுள்ளனர். இதன் வெளியீட்டு விழாவில் எச்.எம்.மின்ஹாஜ் இஸ்லாஹியின் சிறப்பு சொற்பொழிவும் இடம் பெறவுள்ளது. நூலின் முதற்பிரதி பெண்கள் வைபவத்தில் றிஸானாவின் தாயார் றிஸினாவிடமும், ஆண்கள் வைபவத்தில் முதற்பிரதியினை றிஸானாவின் தந்தை நபீக்கிடமும் வழங்கி வைக்கப்படும்.

கடந்த ஜனவரி மாதம் 9ம் திகதி சஊதி அரேபியாவில் கொலை குற்றச்சாட்டு ஒன்றில் மரண தண்டனைக்குள்ளான மூதூர் ஷாபி நகரைச்சேர்ந்த றிஸனா நபீக்குக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது முதல் ஊடகங்களில் பரபரப்பாக வெளிவந்த கட்டுரைகள் ஆக்கங்களை தொகுத்து இந்த நூல் வெளியிடப்படுகின்றது. அத்தோடு றிஷானா தொடர்பான ஒரு இறுவெட்டும் வெளியிடப்பட உள்ளது.

இந்த வெளியீடுகளின் மூலம் கிடைக்கும் நிதியினை றிஷானா நபீக்கின் குடும்பத்திற்கு வழங்குவதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி மீடியா போரத்தின் செயலாளர் மௌலவி எஸ்.எம்.முஸ்தபா மேலும் தெரிவித்தார்.

https://www.facebook.com/allahoruvann

0 comments:

Post a Comment

 
Top