பள்ளிவாசலா? அல்லது பாடல் அரங்கமா?

https://www.facebook.com/allahoruvann
http://allahoruvan.blogspot.com/

நரகத்தைப் பெற்றுத் தரும் இந்த மவ்லிதுக் குப்பைகளை வீடுகளில் ஓதக் கூடாது என்று தவ்ஹீது ஜமாஅத்தின் தீவிரப் பிரச்சாரத்தினால் இன்று மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.


வீடுகளில் இந்தக் கவிதைகளைப் படிப்பது வெகுவாகக் குறைந்து வருகின்றது. மக்களிடம் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தைத் தாங்கிக் கொள்ள முடியாத ஒரு கூட்டத்தினர், தற்போது இதைப் பள்ளிவாசல்களில் படிப்பதற்கு ஏற்பாடு செய்கின்றனர்.

அல்லாஹ்வை அழைப்பதற்குப் பதிலாக, யா முஹம்மது என்று அழைத்து திக்ரு செய்பவர்கள் தான் இந்தக் கூட்டத்தினர். யா முஹம்மது என்று திக்ர் செய்வது தெளிவான இறை மறுப்பு (குஃப்ர்) என்று தமிழகத்திலுள்ள சுன்னத் வல் ஜமாஅத் மதரஸாக்களில் கூட ஃபத்வா கொடுத்துள்ளனர். இந்தக் குஃப்ரைச் செய்து கொண்டிருக்கும் இறை நிராகரிப்புக் கும்பல் தான் இன்று பள்ளிவாசல்களைப் பாடல் அரங்கமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியன. எனவே அல்லாஹ்வுடன் வேறு எவரையும் அழைக்காதீர்கள்! அல்குர்ஆன் 72:18

அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டிய பள்ளிவாசல்களில் இந்த ஆராதனைப் பாடல்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றனர்.

இதைச் சுட்டிக் காட்டித் திருத்த வேண்டிய ஆலிம்கள், வருவாய்க்காகவும், வயிற்றுப் பிழைப்புக்காகவும் இவர்கள் பாடச்சொல்லும் இடங்களில் பாடவும் ஆடவும் தயாராகி விட்டார்கள்.

இஸ்லாமிய சமுதாயமே! இந்தக் கூட்டத்தினர், நபிகளார் மீது மவ்லிது ஓதுகிறோம் என்று கூறி சுப்ஹான மவ்லிதை ஓதுவார்கள். இதை அனுமதித்தால், குளத்தில் போய் விடலைப் பெண்ணைத் தடவிப் பார்த்த ஷாகுல் ஹமீது மவ்லிது போன்ற செக்ஸ் பாடல்களையும் பள்ளிவாசல்களில் வைத்துப் பாட வேண்டும் என்று சொல்வார்கள்.

எனவே இந்தக் கூட்டத்தினரின் வெறியாட்டத்திற்கு ஒரு முடிவு கட்ட வாருங்கள். அல்லாஹ்வின் பள்ளிவாசல்களில் அவனை மட்டும் அழைத்துப் பிரார்த்திக்கும் நிலையை ஏற்படுத்துங்கள். இல்லையேல் பள்ளிவாசல் நிர்வாகத்தினரும், அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் முஹல்லாவாசிகளும் இந்தப் பாவத்தில் பங்கெடுத்து நரகத்திற்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்று எச்சரிக்கின்றோம்.

பள்ளிவாசல்களில் இந்த இணை வைப்புக் காரியங்களை நிர்வாகத்தினர் தடுத்து நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால், அந்தந்த பள்ளி முஹல்லாவைச் சேர்ந்த தவ்ஹீது சகோதரர்கள், பள்ளிவாசலில் தங்களுக்குள்ள உரிமையைப் பயன்படுத்தி இந்த அநியாயத்தைத் தடுத்து நிறுத்துவதற்காக சொற்பொழிவாற்ற வேண்டிய நிலை ஏற்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அனைத்து மதரஸாக்களாலும் காஃபிர்கள் என்று ஃபத்வா கொடுக்கப்பட்ட இந்தக் கூட்டத்தினருக்கு பள்ளிவாசலில் மவ்லிது ஓத அனுமதியிருக்கின்றது என்றால், முஹல்லாவாசிகளான தவ்ஹீது சகோதரர்களுக்கு அங்கு பிரசங்கம் செய்வதற்கு உரிமை இருக்கின்றது என்பதைப் பொதுமக்களின் கவனத்திற்குக் கொண்டு வருகின்றோம்.

புகாரி தர்ஹாவில் புனித முடியா?

இதை போன்ற மற்றொரு வழிகெட்ட கூட்டத்தினர் இன்னொரு மவ்ட்டீகத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளனர். அதாவது கல்லறைகளைக் கட்டிக் கொண்டு அழும் அந்தக் கருத்துக் குருடர்கள் தற்போது புதிதாக முடி கலாச்சாரத்தையும் தூக்கி இருக்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்களின் முடி தங்களிடம் இருப்பதாகவும் அதைப் பாலில் நனைத்து பொதுமக்களுக்குக் கொடுக்கப் போவதாகவும் புளுகியிருக்கின்றார்கள்.

தமது முடியைப் பாலில் நனைத்துக் குடிக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்களா? அவ்வாறு குடித்தால் புனிதம் கிடைக்குமா? என்பதையெல்லாம் விட்டு விடுவோம்.

இது விஞ்ஞான யுகம். ஒரு முடியை வைத்து குளோனிங் முறையில் அந்த ஆளையே உருவாக்கி விடும் அளவுக்கு விஞ்ஞானம் முன்னேறியுள்ளது. அது போல் ஒரு முடியைக் கொடுத்தால், அது எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவருடைய முடி என்பதை ஆய்வின் மூலம் அறிந்து கொள்ள முடியும். கார்பன் டேட்டிங் என்ற முறையில், புஹாரி தர்ஹாவில் உள்ள அந்த முடியை ஆய்வுக்கு உட்படுத்திப் பார்ப்போம். அது 1400 ஆண்டுகளுக்கு முந்தைய முடியா? என்பதை ஆய்வு செய்வோம்.

ஒரு வேளை அது 1400 ஆண்டுகளுக்கு முந்தைய முடியாக இருந்தாலும் அது நபி (ஸல்) அவர்களின் முடி என்றாகி விடாது.

நம்முடைய மார்க்கத்தில் நபி (ஸல்) அவர்கள் தொடர்பான பொருளாக இருந்தாலும், போதனையாக இருந்தாலும் அதற்கு ஸனது எனும் சங்கிலித் தொடரான ஆதாரம் வேண்டும்.

இன்று இவர்கள் குறிப்பிடக்கூடிய இந்த முடி விவகாரத்திற்கும், ஹதீஸ் கலை அறிஞர்கள் வகுத்திருக்கும் அடிப்படையிலான சங்கிலித் தொடர் வரிசை இருக்க வேண்டும். அதாவது அந்த முடி நபி (ஸல்) அவர்களிடமிருந்து, நபித்தோழர், பிறகு அவரிடமிருந்து தாபிஃ, பிறகு தாபிஃயிடமிருந்து தபவுத் தாபிஃ லி இப்படித் தலைமுறை தலைமுறையாக வந்து புஹாரி தர்ஹாவுக்கு எப்படி வந்தது என்று நிரூபிக்க வேண்டும். இதை ஓர் அறைகூவலாகவே விடுக்கின்றோம். இவ்வாறு நிரூபிக்கவில்லையெனில் இது சரித்திர நாயகரான நபி (ஸல்) அவர்களின் முடியல்ல, ஏதோ தரித்திரம் பிடித்தவனின் முடி என்றாகி விடும்.

0 comments:

Post a Comment

 
Top