பொது பல சேனாவின் திடீர் மாற்றம் முஸ்லிம் மக்களே சிந்தியுங்கள் திருப்தியடைந்து விடாதீர்கள்!
குனூத் நிறுத்தம், பொதுபல சேனாவின் சத்தக் குறைவு என்று மெல்ல மெல்ல முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதப் போக்கு “தனிந்து” செல்வது போன்ற ஒரு தோற்றப்பாட்டை உருவாக்கியிருப்பதன் மூலம் பெரும்பாலான முஸ்லிம்கள் “அல்ஹம்துலில்லாஹ்” என்று பெருமூச்சு விடும் நிலை துளிர்விடுகிறது.
ஆயினும், இந்நிலவர ஏற்பாடுகளின் பின்னால் பாரிய வேலைத்திட்டம் இருப்பதாக விஷயமறிந்த வட்டாரங்கள் தகவல் வழங்கியிருக்கின்றன.
பொது பல சேனாவின் பிரச்சாரப் பீரங்கி ஞானசார தேரரை சர்வதேச அங்கீகாரம் பெற வைக்கும் நோக்கில் அவர்களின் அனுசரணையாளர்கள் என கருதப்படும் நோர்வே மற்றும் அமெரிக்கா அனுப்பி வைக்க வேண்டிய தேவை இருப்பதால் இனவாதத்திற்கு தற்காலிக ஓய்வு வழங்கும் நோக்கிலேயே கடந்த வாரம் பாதுகாப்பு செயலகம் ஜம் இயத்துல் உலமாவையும் பொது பல சேனாவையையும் கை குலுக்க வைத்து, நாட்டு மக்களுக்கு நற்காலம் பிறந்து விட்ட நற்செய்தி மூலம் “குனூத்” ஓதுவதையும் நிறுத்தச் சொல்லியிருந்த நிலையில், நேற்றைய தினம் கண்டியிலும் வேறு வழியில் மத நல்லிணக்கம் அரங்கேற்றப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும் இரு “பல” சேனாக்களையும் தற்காலிக நட்பு முகம் காட்ட வைப்பதன் மூலம் சமீப காலமாக கொதித்தெழுந்து வீர வசனம் பேச முன் வந்த அமைச்சர்களையும் வாயடைக்க வைத்து, முஸ்லிம் மக்களையும் நம்ப வைக்கும் இரு காய்களும் ஒரே நகர்வில் செயலாற்றப்பட்ட அரசியல் அரங்கேற்றப்பட்டுள்ளதாக அரசியல் அவதானிகள் கருத்து வழங்கியுள்ளனர்.
இது குறித்து நாம் உரையாடிய பெரும்பாலானஅரசியல் பிரதிநிதிகள் தமது கவலையைத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Home
»
இறுதித்தூதர்
»
கட்டுரைகள்
»
கேள்வி/பதில்
»
தொழுகை
»
பெண்கள் பகுதி
»
ரமழான்
»
விமர்சனம்
» பொது பல சேனாவின் திடீர் மாற்றம் முஸ்லிம் மக்களே சிந்தியுங்கள் திருப்தியடைந்து விடாதீர்கள்!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment